2025 மே 21, புதன்கிழமை

குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களுக்கு பொருட்கள் கையளிப்பு

Kogilavani   / 2013 மார்ச் 07 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆகில் அஹமட்.


'ரன்பிமட அருணலு' வேலைத்திட்டத்தின் கீழ் மதவாச்சி தேர்தல் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களுக்கு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்ஜித்தினால் நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

மதவாச்சி தேர்தல் தொகுதிக்குட்பட்ட கெப்பித்திகொள்ளாவ, மதவாச்சி, மதவியா ஆகிய பிரதேசங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, இரண்டு சில்லு உழவு இயந்திரங்கள், மரக்கறி வகைகளை எடுத்துச் செல்லும் பிளாஸ்டிக் கூடைகள், தையல் இயந்திரங்கள், மிளகாய் தூள் அரைக்கும் ஆலை இயந்திரங்கள், நீர்இறைக்கும் இயந்திரங்கள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதன்போது மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.எச்.நந்தசேன, மாகாண சபை உறுப்பினர் கல்யாணி கரல்லியத்த உட்பட்டோரும் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .