2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் தந்தை பலி; மகன் காயம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 08 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்லாஹ்,-எஸ்.எம்.மும்தாஜ்

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகிச்சென்று மரத்துடன் மோதி விபத்திற்கு உள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

திருமண வைபவம் ஒன்றுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோதே
பங்கதெனிய திகன்வௌ பிரதேசத்தில் இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் தந்தை மரணமடைந்துள்ளதுடன், மகன் படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

பள்ளம பொத்துக்குலம் பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.ஏ.சுசந்த சந்திரலால் (வயது 42) என்பவரே மரணமடைந்துள்ள அதேவேளை, ஜே.ஏ.ரவீந்திர ஜயசிங்க (வயது 7) என்ற சிறுவனே படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X