2025 ஜூலை 09, புதன்கிழமை

யுவதியை வல்லுறவு புரிந்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 08 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

24 வயதான யுவதி ஒருவரை அம்பியூலன்ஸ் வண்டிக்குள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வைத்தியசாலையின் ஊழியர் ஒருரை எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மஜிஸ்திரேட்டும்  மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண், பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெறச்சென்ற இந்த யுவதி மேலதிக சிகிச்சைக்காக மற்றுமொரு வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டியில் கொண்டுசெல்லப்பட்டார். இதன்போது அம்பியூலன்ஸ் வண்டியில் சென்ற வைத்தியசாலையின் ஊழியர் இந்த யுவதியை  அம்பியூலன்ஸ் வண்டியினுள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதுடன், பின்னர் இரண்டாவது தடவையாகவும் வைத்தியசாலையின் வளாகத்திற்குள்ளும் இந்த யுவதியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .