2025 மே 21, புதன்கிழமை

மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2013 மார்ச் 08 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ், எம்.என்.எம்.ஹிஜாஸ்

மின்னல் தாக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற இடி தாக்கத்தில் சிலாபம், இனிகொடவெல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை அப்பிரதேசத்தில் கடும் மழையுடன் கூடிய மழை நிலவியுள்ள நிலையில், குறித்த இளைஞன் வேறு சிலருடன் மாதம்பை, கடுபிட்டிஓயா எனும் பிரதேசத்திற்பு அருகில் நின்றிருந்த சமயம் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
 
இதன் பின்னர் உடனடியாக அவர் மாதம்பை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .