2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

Kanagaraj   / 2013 மார்ச் 09 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லதரன்கட்டு பிரதேசத்தில்  புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் இன்று சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதுண்டு பலியாகியுள்ளார்.

ஆராச்சிக்ககட்டு நல்லதரன்கட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழநதுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் சிலாபம வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் அச்சமயம் உயிரிழந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X