2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மரண உதவி சங்க கூட்டத்தில் உரையாற்றியவர் மரணம்

Kogilavani   / 2013 மார்ச் 11 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ், அப்துல்லாஹ்

மரண உதவி சங்கம் ஒன்றின் கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சிலாபம் பம்மல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

பம்மல பிரதேசத்தைச் சேர்ந்த ஹியுபட் தமெல் (வயது 65) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சிலாபம் பம்மல றோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மரண உதவி நலன்புரிச் சங்கக் கூட்டத்தில் இவர் உரையாற்றிகொண்டிருந்தபோது திடீரென சுகவீனமடைந்தார்.

இதனையடுத்து அவர் உடனடியாக சிலாபம் வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டபோதும் அவர்  ஏலவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி நபர் கடந்த சிலாபம் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X