2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மோப்ப நாய்களின் உதவியுடன் கஞ்சா விற்பனையாளர்களை கைதுசெய்ய நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 12 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

மிஹிந்தலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை கைதுசெய்வதற்காக பொலிஸ் மோப்ப நாய்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து  வருகிறது. இதனைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மிஹிந்தலை நகரில் உள்ள பாடசாலை ஒன்றைச் சேர்ந்த  மாணவர் ஒருவர்; கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. தனமல்வில பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கிலோகிராம் கஞ்சா 30 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ள தகவலும் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X