2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிறுநீரக நோயாளிகளுக்கு உதவி

A.P.Mathan   / 2013 மார்ச் 12 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆகில் அஹமட்


அநுராதபுரம் மாவட்டத்தில் பெரும் தலையிடியாக மாறியுள்ள சிறு நீரக நோயினை கட்டுப்படுத்தும் நோக்கிலும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நோயாளர்களுக்கு தேவையான வசதிவாய்ப்புக்களை வழங்கும் நோக்கிலும் வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரால் நேற்று திங்கட்கிழமை பல்வேறு பொருட்களும் உபகரணங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் ஆலோசனைகளுக்கிணங்க அநுராதபுரம் சிறுநீரக வைத்தியசாலைக்கு ஐந்து இரத்தம் சுத்தி கரிக்கும் இயந்திரங்களும் 250 கிலோ வோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஜெனரேட்டர் ஒன்றும் முதலமைச்சரினாலும் பிரதி அமைச்சரினாலும் வழங்கி வைக்கப்பட்டன.

சிறுநீரக நோயாளர்கள் அதிகமாகவுள்ள பதவியா பகுதி மக்களின் நலன்கருதி பதவியா வைத்தியசாலைக்கு ஐரோப்பிய சங்கத்தால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினூடாக வழங்கப்பட்ட ஒரு கோடி 70 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன வசதிகள் கொண்ட நோயாளர் வண்டியும் வழங்கப்பட்டது. பதவியா, கெப்பிட்டிகொள்ளாவ ஆகிய பிரதேசங்களில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நோயாளர்களின் நலன்கருதி 1000 விசேட பில்டர்கள், ஹொரவ்பொத்தான சமகிகம கிராம மக்களின் நலன் கருதி 17 இலட்சம் ரூபா பெறுமதியான கிணற்று நீர் சுத்திகரிக்கும் விசேட கருவி, இரசாயன பசளை பாவனையால் சிறுநீரக நோய் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இயற்கை உரம் தயாரிக்கும் உபகரணங்கள் என்பனவும் முதலமைச்சரினாலும் பிரதி அமைச்சரினாலும் வழங்கி வைக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X