2025 மே 21, புதன்கிழமை

சிறுநீரக நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 மார்ச் 13 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் மிக வேகமாகப் பரவி வரும் சிறுநீரக நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைப்படி துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி அநுராதபுரம் சிறுநீரக வைத்தியசாலையிலுள்ள 20 குருதி சுத்தப்படுத்தும் இயந்திரங்களுக்கு மேலதிகமாக ஒரு கோடி ரூபா செலவில் மேலும் 5 இயந்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.

சிறுநீரக நோய் தொடர்பாக மாவட்டத்திலுள்ள மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அதிகளவில் சிறுநீரக நோயாளர்களைக் கொண்ட விலச்சிய பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு ஒரு கோடி 70 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன வசதிகளுடன்கூடிய அம்பியூலன்ஸ் வண்டி, கிராம மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 1000 பில்டர்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளன.

மேலும் ஹொரவப்பொத்தானை சமகிகம கிராமத்திற்கு 17 இலட்சம் ரூபா பெறுமதியான நீரை சுத்தப்படுத்தும் இயந்திரமொன்றும் வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .