2025 மே 21, புதன்கிழமை

கலை போட்டிகளுக்கான விண்ணப்பம் கோரல்

Super User   / 2013 மார்ச் 13 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

வட மேல் மாகாண சபையின் கலாசார பிரிவினால் கலை போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் வட மேல் மாகாணத்தின் நிரந்தர வதிவாளர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளன.

இதற்கமைய சிறுகதை போட்டி, கட்டுரையாக்கம், நூலாக்கம், அச்சிடப்பட்ட நூலாக்கம், சித்திரம், சிலை செதுக்குதல், குறுத்தோலை பின்னுதல், நெய்தல், ஆகிய போட்டிகளுடன் புகைப்பட போட்டியும் நடாத்தப்படவுள்ளளது.

போட்டி நிகழ்ச்சிகள் மூன்று மொழிகளிலும் நடாத்தப்படவுள்ளதுடன் பூரணப்படுத்தப்பட்ட ஆக்கங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாச்சார உத்தியோகத்தரிடம் நேரடியாக அல்லது பதிவு தபாலில் கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

இந்த  போட்டி நிகழ்ச்சிகள் தொடர்பான மேலதிக தகவல்களினை பிரதேச செயலகங்களிலுள்ள கலாச்சார உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .