2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விவசாயிகளுக்கு உரம் தயாரிக்கும் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 14 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆகில் அஹமட்


'நாம் பயிரிடுவோம், தேசத்தை கட்டியெழுப்புவோம்' திட்டத்தின் கீழ், ஹொரவப்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் 1,000 பேருக்கு கொம்போஸ்ட் உரம் தயாரிக்கும் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோன் மற்றும் கமநல சேவைகள், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் கொம்போஸ்ட் உரம் தயாரிக்கும் உபகரணங்கள் நேற்று புதன்கிழமை வழங்கிவைத்தனர்.

கொம்போஸ்ட் உரத்தைப் பயன்படுத்தி நெற்பயிர்ச்; செய்கையில் ஈடுபடுபவர்களிடமிருந்து அடுத்த சிறுபோகம் தொடக்கம் ஒரு கிலோ நெல்லினை 45 ரூபாவுக்கு கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கொம்போஸ்ட் உரம் தயாரிக்கும் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் திட்டம் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .