2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

புத்தளத்தில் இரு இளைஞர்கள் கடத்தல்

Super User   / 2013 மார்ச் 14 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்க ஜயசிங்க

புத்தளம் நகரில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் புத்தளம் நூர் பள்ளிவாசல் சந்தியில் வைத்தே இனந்தெரியாத குழுவினரால் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினர் கடத்த நடவடிக்கைக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தை பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் இவர்கள் இருவரும் கடத்தப்பட்ட இடத்திலேயே பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது இவர்கள் இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களிள் ஒருவர் ஆபத்தான நிலையிலுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

காதல் விவகாரமே இந்த கடத்தலுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X