2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மர குற்றிகளினை ஏற்றிவந்த கிராம சேவகர் உட்பட இருவர் கைது

Super User   / 2013 மார்ச் 14 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ், ஏ.எஸ்.எப்.ஜெஸீரா, ஜே.இஸட்.ஏ.நமாஷ்

அனுமதி பத்திரமின்றி முதுரை மர குற்றிகளினை ஏற்றிவந்த கிராம சேவகரும் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஹல புளியங்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை சாலியவௌ பொலிஸாரினால் லொறியொன்றினை சோதனை மேற்கொண்டபோதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஒரு தொகை முதுரை மர மரக் குற்றிகளும் லொறியும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள கிராம சேவகர் கருவலகஸ்வௌ பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் இன்று ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X