2025 மே 21, புதன்கிழமை

நீதவானின் வாகனத்தின் மீது கல்வீச்சு

Kanagaraj   / 2013 மார்ச் 14 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதவான் பயணித்த வாகனத்தின் மீது கல்வீசிய சம்பவம் ஒன்று மிஹிந்தலை பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.

கல்வீசினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்துபேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் பிரதான நீதவான் ருவன்திக்கா மாரப்பன் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் மீதே கல்வீசப்பட்டுள்ளது.

கஹட்டகஸ்திகிலியவிலிருந்து அனுராதபுரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் மதுபோதையில் இருந்தார்களா என்பது தொடர்பில் கண்டறிவதற்கு வைத்திய அறிக்கை கோரப்பட்டுள்ளது. இந்த கல்வீச்சு சம்பவத்தினால் வாகனத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .