2025 மே 21, புதன்கிழமை

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் மூவர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 15 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் சிங்ஹகனு பகுதியில் பெண்ணொருவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 இளைஞர்களை நேற்று வியாழக்கிழமை அநுராதபுரம் தலைமைகப் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரத்கம, வேபட பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டுள்ளார்.

28, 27, 26 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இராணுவத்திலிருந்து தப்பி வந்த ஒருவரும் உள்ளடங்குகிறார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பையில் இருந்த 6000 ரூபா பணம்; உட்பட சில பொருட்களையும் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .