2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வயல் நிலங்களை மேட்டு நிலங்களாக மாற்றுவதற்கு தடை

Super User   / 2013 மார்ச் 18 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வயல் நிலங்களை மேட்டு நிலங்களாக மாற்றுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கூடிய தண்டணை பெற்றுக் கொடுக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

எந்தவொரு நிறுவனத்துக்கும் விவசாய அபிவிருத்தி தொடர்பான சட்டதிட்டங்களை மீறிச் செயற்பட முடியாது என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு சட்டதிட்டங்களை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால் வயல் நிலங்களில் நிரப்பப்பட்ட மண்ணைக்கூட திரும்பப்பெற வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

வயற் காணிகளை மேட்டு நிலங்களாக மாற்றுபவர்கள் தொடர்பாக தகவல் தெரிந்தால் உடன் எமக்கு தெரியப்படுத்துமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X