2025 மே 21, புதன்கிழமை

பல பெண்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 19 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பெண்கள் பலரை ஏமாற்றி திருமணம் முடித்து பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒருவரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மஜிஸ்திரேட்டும்; மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன நேற்று உத்தரவிட்டார்.

பட்டுவத்த, ராகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம், வன்னியன்குளம் பகுதியைச் சேந்த பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சந்தேக நபர் வன்னியன்குளம் பகுதியைச் பெண்ணொருவரைத் திருமணம் முடித்து அவரிடமிருந்தும் ஒரு இலட்சத்து 38 ஆயிரம் ரூபா பணத்தையும் 8 பவுண் தங்கநகைகளையும் எடுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .