2025 மே 21, புதன்கிழமை

'விமான நிலையம் திறப்பு தொடர்பில் பொய்யான கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன'

Kogilavani   / 2013 மார்ச் 20 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்               

மத்தல  மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத் திறப்பு விழா தொடர்பாக ஐ.தே.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன மக்களை திசை திருப்பும் நோக்கில் உண்மைக்குப் புறம்பான பொய்யான கருத்துக்களை காழ்ப்புணர்வுடன் வெளியிட்டு வருவதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

"ஐக்கிய தேசியக் கட்சியின்  ஆட்சிக் காலத்தில் இலாபமீட்டிக் கொண்டிருந்த பல அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்பட்டன.

கோடிக் கணக்காக வெளிநாட்டு கடன்களை பெற்ற  போதினிலும் உருப்படியான எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்  நூற்றுக்கணக்கான மாகாண மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர்.

எனவே ஐக்கிய தேசியக் கட்சியினர்  காழ்ப்புணர்வுடன் பொய்யான கருத்துக்கள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .