2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சிலாபத்தில் இரவு ஹோட்டல்களில் திடீர் சோதனை

Kanagaraj   / 2013 மார்ச் 22 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

சிலாபம் நகரிலுள்ள இரவு ஹோட்டல்களில் நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது வியாபாரிகள் ஒன்பது பேருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இந்த திடீர் சோதனை நடவடிக்கைகள் நேற்று வியாழக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது பாவனைக்கு உதவாத சுமார் 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவு வகைகளையும் அவர்கள் அழித்துள்ளனர்.

இரவுநேர ஹோட்டல்களில் வைக்கப்பட்டுள்ள உணவு வகைகள் உரிய தரத்தில் இல்லாமல் மற்றும் சுகாதாரமான முறையில் இல்லாமல் இருப்பதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்தே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் போது 17 ஹோட்டல்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.  இதன் போது மனிதப் பாவனைக்கு உதவாத உணவுப் பண்டங்களைக் காட்சிப்படுத்திய மற்றும் தயாரித்த 9 ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இந்நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த 17 ஹோட்டல் உரிமையாளர்களையும் கடுமையாக எச்சரிக்கை  விடுத்ததுடன், அங்கு இருந்த மனிதப் பாவனைக்கு உதவாத  ஏராளமான உணவுப்பண்டங்களை அழித்துள்ளனர். இவற்றின் பெறுமதி சுமார் 60 ஆயிரம் ரூபாய் எனவும் அவ்வதிகாரிகள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X