2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் அநீதி இழைக்கப்பட மாட்டாது'

Suganthini Ratnam   / 2013 மார்ச் 24 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணத்திலுள்ள அரசாங்கத்  திணைக்களங்களில் பட்டதாரி பயிலுநர்களாக சேவையாற்றும் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் எதுவித அநீதியும் இழைக்கப்படமாட்டாது என வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம், ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்கியுள்ளன. மேலும், இவர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்காக பல்வேறு செயற்பாடுகளையுயம் முன்னெடுத்துள்ளது.

35 வயதை பூர்த்தி செய்த ஒரு வருட கால பயிற்சியை நிறைவு செய்த பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்திலுள்ள பட்டதாரிகள் தங்களது நிரந்தர நியமனம் தொடர்பில் அஞ்ச வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X