2025 மே 21, புதன்கிழமை

ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் நேர்முக பரீட்சை ஏப்ரலில்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 29 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆகில் அஹமட்

வடமத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் முகமாக பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் நேர்முகப்பரீட்சைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை வடமத்திய மாகாண கல்வியமைச்சில் நடைபெறவுள்ளதாக மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பண்டிதரத்ன தெரிவித்தார்.

வடமத்திய மாகாண பாடசாலைகளில் 3,300க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பற்றாக்குறை பாடரீதியாக நிலவுகின்றன. ஆனாலும் 500 பட்டதாரிகளே ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

இச்சேவைக்கு விண்ணப்பித்துள்ள சுமார் 7,300 பட்டதாரிகளிலிருந்து 500 பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

கோட்ட ரீதியாக நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையின் அடிப்படையில் விண்ணப்பம் கோரப்பட்ட அதேவேளை, நியமனம் பெறும் பாடசாலையில் குறைந்தது 5 வருடங்களும் கோட்டத்தில் 10 வருடங்களும் கட்டாயம் சேவையாற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் எனவும் வடமத்திய மாகாண கல்வியமைச்சின் செயலாளர் பண்டிதரத்ன தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .