2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

அநுராதபுரம் ஜயந்தி மாவத்தையில் டெங்கொழிப்பு நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 29 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆகில் அஹமட்

அநுராதபுரம் ஜயந்தி மாவத்தை பகுதியிலுள்ள பலருக்கு டெங்கு காய்ச்சல் பரவியிலுள்ள நிலையில்,  ஜயந்தி மாவத்த பகுதியெங்கும் இன்று வெள்ளிக்கிழமை டெங்கு நுளம்புகளை அழிக்கும் மருந்துகள் விசிரப்பட்டன.

டெங்கு நுளம்புகளை அழிக்கும் மருந்துகள்  விசிரும் நடவடிக்கையை அநுராதபுரம் மாநகரசபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்டனர்.

இடையிடையே இப்பகுதியில் மழை பெய்து வருவதால் ஆங்காங்கு மழை நீர் தேங்கிநிற்கின்றது. இதனால் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகி இப்பகுதிவாழ் மக்களில் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே டெங்கு நுளம்புகளை அழிக்கும் மருந்துகள் விசிரப்பட்டதாக இப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X