2025 மே 21, புதன்கிழமை

கல்பிட்டியில் பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கல்பிட்டி நகரில் பாவனைக்கு உதவாத சுமார் 80 ஆயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

கல்பிட்டி நகரில் சுகாதார வைத்திய அதிகாரிகள் நேற்று புதன்கிழமை மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கையின்போதே, பாவனைக்கு உதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பலசரக்குக் கடைகள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள் உட்பட 20 வர்த்தக நிலையங்களில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது காலாவதியான பிஸ்கட் பொதிகள், ரின் மீன்கள், ரின் பால், சோஸ் வகைகள், அரிசி, உழுந்து, தானியம்,  பதிவு புதுப்பிக்கப்படாதிருந்த தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கல்பிட்டி பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் 3 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளன.  ஏனைய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை எச்சரித்துள்ளதாகவும் கல்பிட்டி பிரதேச பொது சுகாதார அதிகாரிகள் கூறினர்.

கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.தனஞ்சயனின் ஆலோசனைக்கு அமைய கல்பிட்டி பிரதேச சிரேஷ்ட பொது சுகாதார அதிகாரி ஏ.சீ.எம்.ஜவாத் மரைக்கார், பொதுச்சுகாதார அதிகாரிகளான லக்ஸான், வன்னி சேகர, அபேரத்ன ஆகியோர் இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X