2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வென்னப்புவ மீனவர் முகத்துவாரக் கடலில் மூழ்கி பலி

Kanagaraj   / 2013 ஏப்ரல் 04 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

வென்னப்புவ பிரதேச வாசியொருவர் வெருகல் முகத்துவாரக் கடலில் மூழ்கி மரணமாகியுள்ளார்.எஸ்.ரஞ்ஜித் டி சில்வா என்பவரே இவ்வாறு நேற்று காலை கடலில் மூழ்கி பலியாகியுள்ளார்.

வெருகல் முகத்துவாரக் கடலில் மீன்பிடிக் கூலிவேலை செய்வதற்காக நேற்று முன்தினமே அவர் முதன் முறையாக இந்தப்பகுதிக்கு வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெருகல் கல்லடியிலுள்ள தென்பகுதி மீனவ முதலாளியின் மீன் வாடியில் தொழிலாளியாகப் பணிபுரிவதற்கு வந்தவரே இவ்வாறு கடலில் மூழ்கி மரணமாகியுள்ளார்.

கடலுக்குள்ளிருந்து இழுக்கப்பட்டுக் கொண்டிருந்த கரைவலையின் மடியைப் பிடிப்பதற்காக அவர் கடலுக்குள் பாய்ந்து சென்றபோது மூழ்கி விட்டதாகவும் பின்னர் சடலமாகவே மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கந்தளாய் வைத்திய சாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்ற பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X