2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பொறுப்பில்லாத பொறுப்பதிகாரி மீது சட்ட நடவடிக்கை: வழக்குரைஞர்

Super User   / 2013 ஏப்ரல் 08 , பி.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-உபாலி ஆனந்த

நான்கு வயது சிறுமி ஒருவரை பலி கொடுத்து புதையல் பெற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் எப்பாவல பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் இன்று தம்புத்தேகம நீதவானால் விடுதலை செய்யப்பட்டனர்.

வட மத்திய மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சார்பில் சமர்பிக்கப்பட்ட பிரேரணையை கவனத்திற் கொண்ட பின்னர் நீதவான் இவர்களை விடுதலை செய்தார். கைது செய்யப்பட்ட ஒருவரின் மகள் உட்பட 12 பேர் உறவினர்களின் வீடுகளுக்கு போவதற்காக குழுவாக சென்றுகொண்டிருந்தனர்.

இதன்போது இவர்களை நான்கு வயது சிறுமியை பலிகொடுத்து புதையல் பெற முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் மகா இலுப்பலம – பொத்தகம எனுமிடத்தில் எப்பாவெல பொலிஸ் பொறுப்பதிகாரியும் வேறு பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள், தம்மை கைது செய்தமை சட்டவிரோதமான நடவடிக்கை என விளக்கி பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தும்படி வட மத்திய மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிரிவர்த்தனவிடம் முறைப்பாடு செய்தனர். இதனை தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக தந்திரிமலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன நியமிக்கப்பட்டார்.

இவர் விசாரணைகளை மேற்கொண்டு  சந்தேகநபர்கள் புதையல் எடுக்கச் செல்லவில்லை எனவும் எப்பவெல பொலிஸார் இவர்களை தேவையில்லாமல் கைது செய்தனர் எனவும் தனது அறிக்கையில் கூறினர். இந்த விவகாரங்கள் ஒரு பிரேரணை மூலம் நீதவானிடம் தெரிவிக்கப்பட்டபோது, நீதவான் சந்தேகநபர்களை விடுதலை செய்தார்.

இதன்பின் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் புத்திக பண்டார, எப்பாவெல பொலிஸ் பொறுப்பதிகாரி துர்நோக்குடன் சந்தேகநபர்களை கைது செய்தார் என குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X