2025 மே 21, புதன்கிழமை

பழைய துப்பாக்கி பாகங்களுடன் ஒருவர் கைது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 09 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

பழைய துப்பாக்கிகளின் பாகங்கள் அடங்கிய எட்டு சாக்குகளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக மாதம்பை பொலிசார் தெரிவித்தனர். பழைய இரும்புகளை உருக்கும் தொழிற்சாலைக்கு இவற்றை எடுத்துச் செல்லும் வழியிலேயே குறித்த சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிசாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து துப்பாக்கி பாகங்களடங்கிய பொதி மூட்டைகளைக் பொலிஸார் கைப்பற்றி அவற்றை எடுத்துச்சென்ற நபரையும் கைது செய்துள்ளனர். மாதம்பை சுதுவெல்ல எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மாதம்பை பொலிசார் சந்தேக நபருடன் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளின் பாகங்களையும் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X