2025 மே 21, புதன்கிழமை

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு

Kanagaraj   / 2013 ஏப்ரல் 10 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வின் போது ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

வண்ணாத்தவில்லு பிரதேச சபையின் தலைவர் இந்திக சேனாதீரவின் தலைமையில் மாதாந்த சபை அமர்வு செவ்வாய்க்கிழமை நடைப்பெற்ற போது உறுப்பினர்களான அசனார் மரைக்கார் மற்றும் சுல்தான் மரைக்கார் ஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

கரைத்தீவு பகுதியின் வீதி விளக்குகள் நீண்டகாலமாக செயலிழந்து காணப்படுவதுடன் கரைத்தீவு பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகள் தடை செய்யப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே நாம் இருவரும் மாதாந்த சபை அமர்விலிருந்து வெளிநடப்பு செய்ததாக முன்னாள் பிரதேச சபையின் தலைவரும், தற்போதைய உறுப்பினருமான அசனார் மரைக்கார் தெரிவித்தார்.

வண்ணாத்திவில்லு பிரதேச சபையில் ஆளும் கட்சியில் 08 உறுப்பினர்களும், சுயேட்சை மற்றும் ஐக்கிய தேசிய கட்சியில் தலா ஒரு உறுப்பினர் வீதம் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X