2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கொள்ளை குற்றச்சாட்டில் நால்வர் கைது: ஆயுதங்கள் மீட்பு

Kanagaraj   / 2013 ஏப்ரல் 12 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல்லாஹ்


திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நால்வரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் மீட்டுள்ளனர். பெண்கள் அணியும் தங்க நகைகளை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பியோடும் நபர்கள் தொடர்பாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இருவர் ஆனமடுவவில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை விசாரித்த போது தாம் ஒரு குழுவாக இயங்குவதாக தகவல் வழங்கியுள்ளனர். அவர்கள் வழங்கிய தகவலையடுத்து இன்று அதிகாலை தலுவ பகுதியில் வைத்து மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து  டீ 56 ரக துப்பாக்கியொன்றுஇ மகசின் ஒன்றுஇ தோட்டாக்கள் எட்டு என்பவற்றறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மற்றொரு  நபரும் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்த ரம்போ ரக கத்தியும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

விசாரணையின் போது திருடப்பட்ட பொருட்கள் கொள்ளைடிக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள புத்தளம் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X