2025 மே 21, புதன்கிழமை

இந்திய தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

Super User   / 2013 ஏப்ரல் 16 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

பழைய இரும்புகளை உருக்கி மீண்டும் இரும்பு பொருட்களை உற்பத்தி செய்யும் இந்திய நாட்டவருக்கு சொந்தமான தொழிற்சாலையில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தம் உடன்பாடுகள் எதுவுமின்றி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

மாதம்பை சுதுவெல்ல எனும் பிரதேசத்தில் உள்ள இந்த தொழிற்சாலையின் ஊழியர்கள், தமக்கு போதிய சம்பளம் மற்றும் வசதிகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் சுமார் 225 இந்திய தொழிலாளர்களுள் 90 பேர் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தம்மை குறித்த தொழிற்சாலைக்கு வேலைக்கு அழைத்து வரும் போது மாதம் இருபதாயிரம் ரூபாய் ஊதியம் உட்பட தங்குமிடம் மற்றும் ஏனைய வசதிகளும் தரப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்ட போதிலும் தமக்கு எதுவித வசதிகளும் செய்து தரப்படாததுடன் ஊதியமாக மாதம் 7 ஆயிரம் ரூபாயே வழங்கப்படுவதாகவும் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.

எனவே தம்மை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறு இவர்களுள் ஆறு பேர் நிருவாகத்திடம் கேட்டுள்ளனர். எனினும் அந்த வேண்டுகோள் கவனிக்கப்படாததையடுத்தே இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையின் கம்பி உற்பத்தி பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிபகிஷ்கரிப்பு காரணமாக தொழிற்சாலையின் ஏனைய பிரிவுகளின் பணிகளும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த போராட்டம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X