2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணத்தில் நிரந்தர வீடுகளின்றிய நிலையில், தற்காலிகக் கொட்டில்களிலும் கூடாரங்களிலும் வசிக்கும் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வடமத்திய மாகாணசபை திட்டமிட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரக்கோன் தெரிவித்தார்.

பத்து இலட்சம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் 'ஜனசெவன'  வீடமைப்புத் திட்டத்திற்கு அமைய பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், குறைந்த வட்டிக் கடன் அடிப்படையில் மாகாணத்தில் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X