2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

ஏ - 9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

ஏ - 9 வீதியில் மதவாச்சி பிரதேசசபைக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த பஸ் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதியே இவ்விபத்து இடம்பெற்றது.

மதவாச்சி இஸின்பெஸ்ஸகல பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஒருவரே இவ்விபத்தில் மரணமடைந்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் மரணமடைந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் இவ்விபத்தில் காயமடைந்த நிலையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X