2025 மே 21, புதன்கிழமை

அநுராதபுர அபிவிருத்திக்கு பல காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன: பிரதியமைச்சர்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 19 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், நகரத்தில் அமைந்துள்ள பல காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளன என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

அநுராதபுரம் நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், நகரத்தில் அமைந்துள்ள அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம், மாகாண பொறியியலாளர் அலுவலகப் பகுதி, அரச மரக் கூட்டுத்தாபனம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் சுவீகரிக்கப்படவுள்ளதோடு, புகையிரத திணைக்களம், மாநகர மற்றும் மாகாண சபைக்குச் சொந்தமான காணிகளில் உள்ள வாடகை வீடுகள் ஆகியவையும் சுவீகரிக்கப்படவுள்ளதாகவும்  அவர் கூறினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபை, அநுராதபுரம் மாநகர சபை, வடமத்திய மாகாண சபை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்தே இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அநுராதபுரம் நகரத்தில் உள்ள சேமசிங்க மாவத்தை, பொதுச் சந்தைப் பகுதி, அதனை அண்டியுள்ள கும்பிச்சங்குளம் பகுதிகள் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதோடு கும்பிச்சங்குளத்தில் 'சீ. பிளேன்' சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நகர வலயத்தினுள் உள்ள பல அரச திணைக்களங்களும் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளன. பத்து ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட சிறைச்சாலை ஒயாமடுவ பகுதிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X