2025 மே 21, புதன்கிழமை

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

Kogilavani   / 2013 ஏப்ரல் 20 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ்

மாதம்பை, ஆற்றினை அண்மித்த பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்று சிலாபம் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை அதிகாலை சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது சட்ட விரேத மதுபான தயாரிப்புக்கு தயாராகவிருந்த 48 பெரல்களும் ஒரு தொகை சோடா வகைகள் உட்பட சட்டவிரோத மதுபான தயாரிப்புக்கு பயன்படுத்தும் பல்வேறு பொருட்களும் உபகரணங்களும்;; கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த சந்தேக நபர்கள் இருவர் ஆற்றில் பாய்ந்து தப்பிச்சென்றதாகவும் அவர்களினை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X