2025 மே 21, புதன்கிழமை

தேவாலயங்களில் திருடியவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 20 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

பௌத்த விகாரைகள் மற்றும் தேவாலயங்களில் நுழைந்து அவ்விடங்களில் உள்ள பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றதாகச் கூறப்படும் ஒருவர் இம்மாதம் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாராவில மேலதிக மாவட்ட நீதிபதி சந்த கலன்சூரிய முன்னிலையில் இவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். 

மாதம்பை மெல்லவாகார எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மஹவௌ பிரதேச ஸ்ரீ நாகாராம விகாரையினுள் கடந்த 4 ஆம் திகதி நுழைந்து அங்கிருந்த பொருட்களைத் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் மாராவில பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து வேறு பிரதேச விகாரைகளிலிருந்தும் தேவாலயங்களிலிருந்தும் திருடப்பட்ட பல்வேறு பொருட்கள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் மூலம் ஏனைய திருட்டுச் சம்பவங்கள் தொடர்பான விபரங்கள் சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். இவ்வாறு திருடப்பட்ட பல்வேறு பொருட்களுள் சிலதை தான் கடலில் வீசியுள்ளதாகவும் சந்தேக நபர் பொலிசாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேக நபர் முன்னர் பௌத்த மதத்தைப் பின்பற்றி வந்துள்ளதுடன் பின்னர் வேறு மதத்தினைப் பின்பற்றி வந்துள்ள விடயமும் தெரியவந்திருப்பதாக பொலிசார் தெரிவித்தனர். மாராவில பொலிசார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக சிவாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X