2025 மே 21, புதன்கிழமை

ஒருவரை கடத்தி கையொப்பம் பெற்றவருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 ஏப்ரல் 20 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

நபர் ஒருவரை பலாத்காரமாகக் கடத்திச் சென்று அவரிடம் ஒப்பந்த பத்திரம் ஒன்றில் கையொப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இம்மாதம் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சிலாபம் மாவட்ட நீதிபதி ஜகத் கஹதகம முன்னிலையிலே அவரை நேற்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கம்பஹ யக்கல எனும் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவார்.

கடந்த 3 ஆம் திகதி மூவர் தன்னை பலாத்காரமாகக் கடத்திச் சென்று ஓரிடத்தில் வைத்து ஒப்பந்த படிவம் ஒன்றில் கையொப்பம் பெற்றுக் கொண்டு பின்னர் சிலாபம் ரிதீவெல்ல விளையாட்டு மைதானத்திற்கருகில் விடுவித்துச் சென்றதாக சிலாபம் முகுனுவட்டவான் பிரதேசத்தைச் சேர்ந்த டெரிக் சமிந்த சில்வா என்பவர் சிலாபம் பொலிஸ் நிலைத்தில் சம்பவம் தொடர்பில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.

தன்னைக் கடத்த வந்தவர்களுள் பொலிஸ் சீருடை அணிந்த ஒருவருடன் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை மகன் ஆகியோர் இருந்ததாகவும் அம்முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இம்முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த சிலாபம் பொலிசார் கம்பஹா யக்கல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன்  கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் சிலாபம் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.

இவர் சிலாபம் நீதிமன்றத்தில் கடந்த 7 ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை நேற்று வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்ட்டிருந்தது.

பின்னர் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவருக்கு மீண்டும் விளக்க மறியல் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்கடத்தலுக்கு கம்பஹா பிரதேச பொலிஸ் நிலையம் ஒன்றின் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் சம்பந்தப்பட்டதாக சந்தேக நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X