2025 மே 21, புதன்கிழமை

விசாரணைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய இருவர் கைது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 20 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

விசாரணை ஒன்றிற்காக சென்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கியதாகச் கூறப்படும் இருவரைக் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் காயங்களுக்குள்ளான இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆணைவிழுந்தான் பகுதியில் பிரச்சினை ஒன்று இடம்பெறுவதாக ஆராச்சக்கட்டு பிரதேசத்தில் அமைந்துள்ள பொலிஸ் காவலரனுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து ஆனைவிழுந்தான்  பகுதிக்கு விசாரணைக்காக நேற்று இரவு சென்ற குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அங்கிருந்த மூவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு கடுமையான தாக்குதலுக்கு உள்ளான இரு பொலிசாரும் உடனடியாக அங்கிருந்தவர்களினால் சிலாபம் வைத்தியசாலக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சிலாபம் பொலிசார் இன்று சம்பவத்துடன் தொடர்புடைய இருவரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள சிலாபம் பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X