2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

காற்றினால் சேதமான வீடுகளை திருத்துவதற்கு கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 21 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கலென்பிந்துனுவெவ மற்றும் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 3 கிராமங்களில் கடுமையான காற்றினால் சேதமான 30 வீடுகளை திருத்தியமைப்பதற்காக கூரைத்தகடுகள் வழங்கப்படுகின்றன.

வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரக்கோனின் வேண்டுகோளுக்கு அமைய இந்தக் கூரைத்தகடுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த 15ஆம் திகதி வீசிய கடும் காற்றினால் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மீமின்னாவ, கும்புக்வெவ ஆகிய கிராமங்களில் 27 வீடுகளும் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட படிகாரமடுவ கிராமத்தில் 3  வீடுகளும் சேதமடைந்தன.

சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான கூரைத்தகடுகள் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X