2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

'அரச அதிகாரிகள் மக்களுக்கு சேவையாற்றும் வகையில் பணியினை மேற்கொள்ள வேண்டும்'

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 23 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக அரச அதிகாரிகள் செயற்படக் கூடாது. பொதுமக்களுக்கு சேவையாற்றக் கூடியவர்கள் என்ற வகையில் தமது பணியினை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என வடமத்திய மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எச்.பீ.சேமசிங்க தெரிவித்தார்.

மாகாண சுகாதார அமைச்சின் அலுவலகத்தின் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச அதிகாரிகள் இன, மத, கட்சி பேதங்களை மறந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். பொதுமக்களின் பணத்தை சம்பளமாகப் பெறும் நாம் அவர்களுக்கு சிறந்த சேவையினை வழங்குவது எமது பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X