2025 மே 21, புதன்கிழமை

குப்பைக்கு மூட்டிய தீ பரவியதில் வீடு எரிந்து நாசம்

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டராமுல்லை பிரதேசத்தில்  வீடொன்று தீக்கிரையாகி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இவ்வீட்டின் முற்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை  வீட்டு உரிமையாளர்கள் குப்பைக்கு நெருப்பு வைத்துள்ளனர். குப்பைக்கு மூட்டிய தீ பரவி எரிந்து வீட்டிலும் தீ பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வீடு பலகையினாலும் ஓலையினாலும் அமைந்திருந்ததினால் தீ நன்கு பரவியதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வீட்டிலிருந்த தையல் இயந்திரங்கள், துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X