2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட இருவர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

கூறிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட இளைஞர்கள் இருவர் பலத்த காயத்துடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை வௌ;வேறு இடங்களில் நடைப்பெற்றுள்ளது. முதலாவது சம்பவம் புத்தளம் வெட்டுக்குளம் பகுதியிலும் அதனையடுத்து புத்தளம் - அனுராதபுர வீதியின் 2ஆம் மைல் கல் பகுதியிலும் இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டு தாக்குதல் சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை எனவும் தனிப்பட்ட பிரச்சினையே இதற்கு காரணமாகவிருக்கலாம் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரனைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X