2025 மே 21, புதன்கிழமை

கிராமிய வைத்தியசாலைகளை முன்னேற்ற நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 24 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கிராமிய வைத்தியசாலைகளை முன்னேற்றுவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக வடமத்திய மாகாண சுகாதார அமைச்சர் எச்.பீ.சேமசிங்க தெரிவித்தார்.

மாகாணத்திலுள்ள கிராமிய வைத்தியசாலைகளுக்கு அம்பியூலன்ஸ் வண்டிகளை வழங்கும் திட்டத்தின் கீழ், 1,190 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 17 அம்பியூலன்ஸ் வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இவற்றில் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் அவசர நோயாளிகளைக் கொண்டு செல்வதற்காக 2 அம்பியூலன்ஸ் வண்டிகளை வைத்து விட்டு ஏனையவைகளை ஹிங்குரங்கொட, எப்பாவள, ஜயந்திபுர, கலாவௌ, தியபெதும, மரதன்கடவள, மெதிரிகிரிய, மிஹிந்தலை, கலென்பிந்துனுவௌ, வெலிகந்த, பதவிய, கெக்கிராவ, கப்புகொள்ளாவ, லபுநோருவ, வாஹல்கட ஆகிய வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளது.

எதிர்காலத்தில் மேலும் 29 அம்பியூலன்ஸ் வண்டிகளை பெற்று கிராமிய வைத்தியசாலைகளுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X