2025 மே 21, புதன்கிழமை

புத்தளம் பிரதேச சபை தலைவர் விபத்தில் பலி

Kanagaraj   / 2013 ஏப்ரல் 25 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். எம். மும்தாஜ் ,எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் பிரதேச சபையின் தலைவர் திலுக் சுசார பத்தரகே இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து  வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் சிலாபம் தெதுரு ஓயா பிரதேசத்தில் இவ்விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சிலாபம் பொலிசார் தெரிவித்தனர்.

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வண்டியொன்றில் பிரதேச சபைத் தலைவர் பயணித்த கெப் வாகனம் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் பிரதேச சபைத் தலைவர் உயிரிழந்துள்ளதுடன் கெப் வாகனத்தின் சாரதியான சுஜித் குமார காயங்களுக்குள்ளாகி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரங்குளி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட திலுக் பத்திரகே கடந்த புத்தளம் பிரதேச சபைக்கான தேர்தலில் ஆளும் கட்சியில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளைப் பெற்று புத்தளம் பிரதேச சபையின் தலைவரானார்.

இதற்கு முன்னைய பிரதேச சபையின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன் அதி கூடிய வாக்குகளைப் அவர் பெற்றிருந்;தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

உயிரிழந்தவரின் பிரேதம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Friday, 26 April 2013 06:04 PM

    அய்யோ பாவம். ஒரு நல்ல மனிதன். முஸ்லிம்களுக்கு சகோதரன் போன்றவர்...

    Reply : 0       0

    Rifai Sunday, 28 April 2013 08:30 AM

    அகம்பாவம் அற்ற மக்கள் தலைவனின் பிரிவு எங்களுக்கு ஓர் இழப்பு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X