2025 மே 21, புதன்கிழமை

வட மேல் மாகாண ஐ.தே.க உறுப்பினர் கைது

Super User   / 2013 ஏப்ரல் 28 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

வட மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சாண்டர் சிசிற குமார அபேசேகர சிலாபம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாகாண சபை உறுப்பினர் உட்பட இருவர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்க பண்டாரவின் வாகனத்திற்கு மாகாண சபை உறுப்பினர் சாண்டர் சிசிற குமார அபேசேகர தலைமையிலான குழுவினர் சேதம் விளைவித்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று சிலாபம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X