2025 மே 21, புதன்கிழமை

வட மேல் மாகாண சபை உறுப்பினர் சாந்த சிசிற பிணையில் விடுதலை

Super User   / 2013 ஏப்ரல் 29 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ், முஸப்பிர்

ஐக்கிய தேசிய கட்சியின் வட மேல் மாகாண சபை உறுப்பினர் சாந்த சிசிற குமார அபேசேகர நேற்று ஞாயிற்றுக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்  பாலித ரங்க பண்டாரவின் வாகனத்தினை தாக்கிய குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர் சாந்த சிசிற குமார அபேசேகர, பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது 50,000 ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட மற்றைய சந்தேக நபருக்கும் ஐம்பதாயிரம் ரூபா சரீர பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி சந்தேக நபர்கள் இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என பதில் நீதவான் தெரிவித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X