2025 மே 21, புதன்கிழமை

தம்புள்ளைப் பள்ளி உடைக்கப்படமாட்டாது: அமைச்சர் ஜனக்க

Kanagaraj   / 2013 ஏப்ரல் 29 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}




-இ. அம்மார்


மக்கள் சந்தேகப்படுமளவுக்கு பள்ளிவாசல் தம்புள்ளைப் பள்ளிவாசல் உடைக்கப்பட மாட்டாது. தம்புள்ளப் பள்ளிவாசலுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் உதவி எப்போதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றேன் என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த வாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவிய போது பள்ளிவாசல் அகற்றப்பட மாட்டாது  என்று தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில் தம்புள்ளைப் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள்,  அப்பிரதேச சிங்கள முஸ்லிம் மக்கள் ஆகியோர்  உள்ளிட்ட குழுவினருக்கும் அமைச்சருக்குமிடையே தம்புள்ளையில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தில் விசேட சந்திப்போன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தம்புள்ளைப் பள்ளிவாசலைச் சுற்றியுள்ள கடைகள், வீடுகள் என்பன கடந்த ஒரு சில நாட்களாக  உடைக்கப்பட்டு வருகிறன. அதனுடன் தம்புள்ளைப் பள்ளி வாசலும் உடைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சமும்  சந்தேகமும் அப்பிரதேச மக்களிடையே இருப்பது என்பது நியாயமானதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு சில நாட்களாக நகர அபிவிருத்தி சபையினால்  தம்புள்ளைப் பள்ளிவாசலைச் சூழவுள்ள 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உடைக்கப்பட்டுள்ன. பள்ளிவாசல் அமைந்துள்ள காணிக்கு நேராக இருமருங்கிலும் உள்ள கட்டிடங்களே இதில் உடைக்கப்பட்டுள்ளன.

இதனோடு பள்ளிவாசலும் உடைக்கப்பட்டு விடும் என்ற ஒரு சந்கேம் மக்களிடம் நிலவியது.  இந்தப் பள்ளிவாசல் விடயத்தில் இந்தப் பிரதேச மக்களின் பிரதிநிதி என்ற விடயத்தில் நான் மிகவும் உறுதியாக இருக்கின்றேன்.

இருப்பினும் இந்தப் பள்ளிவாசலை பாதுகாத்துக் கொள்வது சம்பந்தமாக முஸ்லிம்கள் உறுதியுடன் இருப்பதன் மூலம்தான் இந்தப் பள்ளிவாசலை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய ஒரு நிலைமையைக் கொண்டு வரலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீ. சு. கட்சி ஆதரவாளர்களின் வீடுகள், கடைகள் உடைக்கப்பட்டதற்காக ஐக்கிய தேசிய கட்சியினர் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றது என்ற வாசகம் அடங்கிய  பதாதையொன்று கடைகள் மற்றும் வீடுகள் அகற்றப்பட்டுள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X