2025 மே 21, புதன்கிழமை

'கோவணத்துடன் பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்'

Kanagaraj   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர் 'கோவணத்தை கட்டிக்கொண்டு பந்தம் ஏந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்' ஈடுபட்டுள்ளார்.

அனுராதபுரம், ஏலயாபத்து பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினரான அனுர பண்டார என்பவரே கோவணத்தை கட்டிக்கொண்டு பந்தத்தை ஏந்தியவாறு மானியகமுவையிலிருந்து ஏலயாபத்து பிரதேச சபை வரை சென்றார்.

அவருடன் ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.ஹரிசன் மற்றும் சந்திராணி பண்டார ஆகிய இருவரும் பந்தத்தை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் இணைந்துக்கொண்டனர்.

கோவணத்துடன் பந்தத்தை ஏந்தியவாறு அவர் பிரதேச சபையின் வாசலுக்கு அருகில் சென்றபோது பிரதேச சபையின் படலையை பிரதேச சபையின் தலைவர்; இழுத்து மூடிவிட்டார்.

சபைக்கு ஒவ்வாத ஆடையை அணிந்து வருகின்றமையினால் சபைக்குள் பிரவேசிப்பதற்கு இடமளிக்க முடியாது என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் சில நிமிடங்கள் அங்கு பதற்றம் நிலவியது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X