2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வட மத்திய மாகாணத்தை சுற்றுலா பிரதேசமாக மாற்றும் திட்டம் முன்னெடுப்பு

Super User   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வட மத்திய மாகாணத்தை சுற்றுலா பிரதேசமாக மாற்றும் மூன்று வருட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் இந்த வருடத்தினுள் அமுல்படுத்தப்படவுள்ளது என அவர் குறிப்பிட்டார். பொலன்னறுவை, அநுராதபுரம், ரிட்டிகல, ஹபரன மற்றும் ஹொரவரப்பொத்தானை ஆகிய பகுதிகளே சுற்றுலாத் துறை பிரதேசங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் புனித பூமிப் பகுதி (அட்டமஸ்தான), மல்வத்து ஓயா பகுதி, கல்பாலம பகுதிகள் சுற்றுலாப் பகுதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

ரிட்டிகலவில் யானைகள் சரணாலயமும், ஹொரவப்பொத்தானையில் 3000 ஏக்கரில் யானைகள் காப்பறனும்  அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வடமத்திய மாகாணத்தில் புதிதாக சுற்றுலா விடுதிகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் வடமத்திய மாகாண சபையும் இணைந்து முன்னெடுத்துள்ளன. 2016ஆம் ஆண்டில் வருடமொன்றுக்கு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைகக்குக வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X