2025 மே 21, புதன்கிழமை

முதன்முறையாக இலங்கையில் நடைபெறுகின்ற மாபெரும் அஹ்லுல்பைத் மாநாடு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்னை பாத்திமா நாயகியின் பிறந்த தினமான ஜுமதுல் ஆகிர் பிறை 20ஆம் திகதி (இவ்வருடம் மே மாதம் முதலாம் திகதி) அஹ்லுல்பைத் நினைவு தினமாக கெக்கிராவ-  கட்டுக்கெலியாவ மஹ்லரதுல் ஜலாளிய்யாஹ் அரபிக் கல்லூரியில் கொண்டாடப்படுகிறது.

இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் பல நூற்றுக் கணக்கான மார்க்க அறிஞர்கள், உலமாக்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் பிரதம பேச்சாளர்களாக அஹ்ளுபைத் மாநாட்டை அலங்கரிக்க இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களின் விபரமும் அவர்கள் பேச இருக்கும் தலைப்புகளும் வருமாறு:

1.மௌலவி A .L .முஹாஜிரீன் ஆலிம் நத்வி.- (அல் காதிரி வர் ரிபாயீ )- அதிபர் அந் நஜாஹ் அரபிக் கலாசாலை - மாத்தளை.
தலைப்பு: "பனூ ஹாசிம் கிளையினரும் மில்ளத்துள் ஹனிபா என்ற உண்மை வழியும்"

2.மௌலவி M.H.M.முஹியித்தீன் ஆலிம் நத்வி.- முன்னாள் அதிபர் புஹாரி அரபுக் கலாசாலை- கிண்ணியா
தலைப்பு: "மகத்துவம் நிறைந்த அஹ்ளுல்பைத்துகள்."

3.மௌலவி H.M.முஸ்தபா-பாரி -செயலாளர்- ஜம்மியத்துல் உலமா சபை-அநுராதபுரம் மாவட்டம்
தலைப்பு: "அஹ்ளுல்பைத்துக்களை மறைப்பதும் பரிசுத்த சந்ததியை மறுப்பதும் ஏன்?"

4.மௌலவி A.H.L.அன்சாரி-பாரி.பிரதம கதீப் ஷாபிஈ ஜும்மாஹ் பள்ளிவாசல் கட்டுக்கெலியாவ -கெகிராவ
தலைப்பு "ஷியா வகுப்பினர் வழி தவறியதன் காரணம்"

5.மௌலவி U.அப்துல் ஹலீம் -மன்பஈ BA -அதிபர் அந் நஹ்ஜதுள் இஸ்லாமியா அரபுக் கலாசாலை - ஏறாவூர்.
தலைப்பு:"சுந்தர நபியின் சுவனத்துப் பெற்றோர்."

6.மௌலவி I.M. நவாஸ் அத்ளி -முன்னாள் பேஷ் இமாம் ரவ்ளத்துள் அதுகியா பள்ளி வாசல் -தொட்டவத்த -பாணந்துறை.
தலைப்பு: "அஹ்ளுல்பைத்களை பின்பற்றாமல் மார்க்கம் இல்லை."

7.மௌலவி M.K.M.இக்ராம்.அல் முர்ஷி -பேராசிரியர் ஜிப்ரியா அரபுக் கலாசாலை- காலி,
தலைப்பு: "அஹ்ளுல்பைத்துக்களும் சஹாபா பெருமக்களது பேரன்பும்."

8.M.J.M.ரிழ்வான் -ஜலாலி-அதிபர் அன்நூருள் முகம்மதியா அரபுக் கலாசாலை கல்ஹின்ன - கண்டி.
தலைப்பு: "இந்த உம்மத்தின் மீது பாசம் நிறைந்தவர்கள் அஹ்ளுல்பைத்துக்கள்."

9.மௌலவி H.F.M.அர்சார்த் ஜலாலி.-பேஷ் இமாம் -மருதானை பெரிய பள்ளிவாசல்
தலைப்பு:"எம்பெருமான் சல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி வசல்லம் அவர்களது ஈரக் கொளுந்தல்லவா  அன்னை பாத்திமா நாயகி அவர்கள்."

10.மௌலவி M.M.அஸ்மில் -மிஸ்பாஹி அஸ் ஷூபி அல் காதிரி.- பணிப்பாளர் மஹ்லரதுல் ஜலாளிய்யாஹ் அரபுக் கல்லூரி -கட்டுக்கெலியாவ கெகிராவ
தலைப்பு:"அஹ்ளுல்பைத்துக்களும் நேர்வழியும்"

அஹ்ளுல்பைத்களை மட்டும் நினைவுபடுத்தி கௌரவிக்கும் இத்தகைய மாநாடு இலங்கையில் நடைபெறுவது முதல் முறையாகும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X