2025 மே 21, புதன்கிழமை

சடலம் மீட்பு

Super User   / 2013 மே 01 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ரஸ்மின்

கற்பிட்டி, முகத்துவாரம் கடற்கரையோரத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் சடலமொன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற கற்பிட்டி பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மரணமானவர் இதுவரையிலும் அடையாளம் காணப்படாவில்லை எனக் குறிப்பிட்ட கற்பிட்டி பொலிஸார், நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் குறிப்பிட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X