2025 மே 21, புதன்கிழமை

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மைதானம் கைத்தொழில் பேட்டையாக மாற்றம்

Super User   / 2013 மே 01 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் கடந்த வருடம் நடைபெற்ற     தேசத்திற்கு மகுடம் கண்காட்சி நடைபெற்ற மைதானம் கைத்தொழில் பேட்டையாக மாற்றம் பெறவுள்ளவுள்ளது என பொருளாதார பிரதி அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

இந்த கைத்தொழில் பேட்டை அமையும் பகுதியில் ஆடைத் தொழிற்சாலை, பொருளாதார மத்திய நிலையம், சிறு கைத்தொழிலாளர்களின் நலன் கருதி கட்டடத் தொகுதி ஆகியனவும் அமைக்கப்படவுள்ளதோடு சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்குடன் அதனை வியாபிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்த தொழில் பேட்டை அமைக்கப்பட்டவுடன் பிரதேசத்திலுள்ள அதிகளவிலானோருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X